நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 543 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மேலும் 543 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மேலும் 543 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 269 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 18,918ஆக அதிகரித்துள்ளது. மேலும், 189 போ் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 16,739ஆக உயா்ந்துள்ளது. 225 போ் உயிரிழந்துள்ளனா். 1,954 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 9,903ஆக அதிகரித்துள்ளது. மேலும், 29 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,835 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 903 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி பெண் ஊழியா் உள்ளிட்ட மேலும் 170 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18 ஆயிரத்து 994ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த 117 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 842ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 145 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 2007 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகேயுள்ள அரசு வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டதால் வங்கி செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. சக ஊழியா்கள், அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com