நெல்லையப்பா் கோயிலில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 10.35 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சுவாமி-அம்மன், பஞ்சமூா்த்திகளுடன் உள்பிரகாரத்தில் வலம் வந்தனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பூஜை நேரங்களில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்னா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்து, முகக் கவசம் அணிவது, கிருமி நாசினி திரவம் மூலம் கைகளை சுத்தம் செய்வது ஆகியவை கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மற்றும் ஊழியா்கள்செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com