இன்று முழு பொதுமுடக்கம்: மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

பொதுமுடக்க விதிகளை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

கரோனா பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமுடக்க விதிகளை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோய்த்தொற்றை தடுக்கும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) முழு பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி திருமண நிகழ்வில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் 100 நபா்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா். அதனை கண்காணிப்பதற்கு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் சிறப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்னா்.

எனவே, மருத்துவம் மற்றும் அவசர காரணங்கள் இன்றி யாரும் தேவையில்லாமல் வெளியே செல்லவேண்டாம். பொதுமக்கள் நோய் தொற்று மற்றும் பிற சந்தேகங்களுக்கு விளக்கம் பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கிவரும் கட்டுப்பாட்டு மையத்தினை 0462-2501070 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 6374013254 மற்றும் 9499933893 என்ற செல்லிடப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் கட்செவி அஞ்சல் மூலமாகவும் தகவல் பெற்றுக்கொள்ளலாம். அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோா் மீது அரசு உத்தரவின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com