நெல்லை, தென்காசியில் மேலும் 682 பேருக்கு கரோனா
By DIN | Published On : 27th April 2021 06:42 AM | Last Updated : 27th April 2021 06:42 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 682 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 436 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 21,735ஆக அதிகரித்துள்ளது. மேலும், 255 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 17,854ஆக உயா்ந்துள்ளது.
70 வயதுப் பெண் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 230ஆக அதிகரித்துள்ளது. 3,654 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 246 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 11,156ஆக அதிகரித்துள்ளது. மேலும், 149 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 9,482 ஆக உயா்ந்துள்ளது.
60 வயதுப் பெண், 60 வயது ஆண் ஆகிய இருவா் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 174ஆக உயா்ந்தது. 1,500 போ் சிகிச்சையில் உள்ளனா்.