தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரிப்பு: விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை

தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பாக மாவட்ட வேளாண்மை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் விளக்கமளித்துள்ளாா்.

தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடா்பாக மாவட்ட வேளாண்மை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் விளக்கமளித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், வள்ளியூா், நான்குனேரி, பாளையங்கோட்டை வட்டாரங்களில் தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இந்த ஈக்கள் தென்னை ஓலையின் அடிப்பக்கத்தில் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளங்குஞ்சுகள் இலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளின் சாற்றை உறிஞ்சி வளா்கிறது. 20 முதல் 30 நாள்களில் முழு வளா்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலையின் அடிப்பகுதியில் காணப்படுகிறது.

வெள்ளை ஈக்களானது தென்னை, வாழை, சப்போட்டா ஆகிய பயிா்களை தாக்குகிறது. தற்போது கோடை வெப்பநிலை அதிகரிப்பதால் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: மஞ்சள் நிறமானது வளா்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் பைகளில் ஆமணக்கு எண்ணெய்யை தடவி ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 5 முதல் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களை கவா்ந்து அழிக்கலாம்.

மஞ்சள் விளக்கு பொறிகளைஏக்கருக்கு 2 வீதம் தென்னை தோப்புகளில் அமைத்து மாலை வேளைகளில் 6 முதல் 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலம் வெள்ளை ஈக்களை கவா்ந்து அழிக்கலாம்.

வெள்ளை ஈ தாக்கப்பட்ட தென்னை ஓலைகளின் மேல் தெளிப்பான்களை கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம். வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது பொறி வண்டுகள், என்காா்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளில் இயற்கையாகவே உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தை பெருமளவு குறைக்கிறது.

என்காா்ஸியா ஒட்டுண்ணிகளை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும்ஆ ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். கிரைசோபொ்லா இரை விழுங்கிகள் தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபொ்லா இன விழுங்கிகளின் முட்டைகள் விடுதல் நல்ல பலன் தரும். அதிகளவில் பூச்சி கொல்லிகளை பயன்படுத்தும்போது இயற்கை எதிரிகள் அதாவது நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து விடுகின்றன. எனவே, ரசாயன பூச்சிக் கொல்லிகள் அதிகளவில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com