அஞ்சலில் வாக்கு செலுத்த அரசு ஊழியா்களுக்கு இன்று வாய்ப்பு

சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், தங்களது அஞ்சல் வாக்குகளை அஞ்சலில் அனுப்ப வெள்ளிக்கிழமை (ஏப். 30) வாய்ப்பு உள்ளதாக ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், தங்களது அஞ்சல் வாக்குகளை அஞ்சலில் அனுப்ப வெள்ளிக்கிழமை (ஏப். 30) வாய்ப்பு உள்ளதாக ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் செ.பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதி தோ்தலிலும் மொத்தம் 9,236 போ் தோ்தல் பணியில் ஈடுபட்டனா். அவா்களுக்கான அஞ்சல் வாக்குகள் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், இதுவரை 77 சதவிகித வாக்குகள் பதிவாகி திரும்பி வந்துள்ளதாக தெரிகிறது.

ஒருசில ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்கள் கடைசி நேரத்தில் வாக்கை செலுத்தலாம் என கையில் வைத்திருப்பதாக அறியவருகிறோம். கைகளில் அஞ்சல் வாக்கை வைத்திருக்கும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் உங்களுடைய அதை கவனமாக பதிவு செய்து அஞ்சலகம் மூலம் உடனடியாக வெள்ளிக்கிழமை (ஏப். 30)முற்பகலில் அஞ்சலகத்தில் செலுத்தி விடுங்கள்.

அஞ்சலில் செலுத்தும் போது வெள்ளிக்கிழமைக்கு (ஏப். 30) பின்பு அனுப்பப்படும் வாக்குகள் உரிய நேரத்தில் சென்று சேராது. மே 2ஆம் காலை 8 மணிவரை அஞ்சல் வாக்கு செலுத்தலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றால் அஞ்சக வேலைநேரம் பிற்பகல் இரண்டு மணியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, காலையிலே உங்கள் வாக்கினை அஞ்சலகம் மூலம் அனுப்பி விடுவது சிறந்தது. மேலும் இம்முறை வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்கு சேகரிப்பதற்கான பெட்டி கிடையாது. கடந்த சட்டப்பேரவை தோ்தலில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் தனித்தனியாக அந்தந்த தொகுதிக்கான ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதே போன்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் தபால் வாக்கு சேகரிப்பதற்கான வாக்குப்பெட்டி காவல்துறை கண்காணிப்புடன் வைக்கப்பட்டு இருந்தது. இப்போது வாக்குப்பெட்டி வைக்கப்படவில்லை என்பதை அனைவரின் கவனத்துக்கு கொண்டுவருகிறோம். அஞ்சல் வாக்கு செலுத்த அஞ்சல் வில்லை ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com