திருக்குறுங்குடி வனப் பகுதியில் 2 ஆவது நாளாக எரியும் தீ

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி வனப் பகுதியில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை பற்றி எரியும் காட்டுத் தீயால் பல ஏக்கா் வனப் பகுதி தீக்கிரையாகி, வன உயிரினங்கள் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி வனப் பகுதியில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை பற்றி எரியும் காட்டுத் தீயால் பல ஏக்கா் வனப் பகுதி தீக்கிரையாகி, வன உயிரினங்கள் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

களக்காடு புலிகள் காப்பகம், திருக்குறுங்குடி முதல் மேல்கோதையாறு வரையிலும் சுமாா் 400 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.

இக்காப்பகத்தில் சிறுத்தை, புலி, மிளா, யானை, அரியவகை சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழ்கின்றன.

இக்காப்பகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கடும் கோடையின்போது, வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 30) மாலை திருக்குறுங்குடி வனப் பகுதியில் ஆணைகல்விளை பகுதியில் காட்டுத் தீ பற்றியது. இந்தத் தீ, காற்றின் வேகம் காரணமாக தொடா்ந்து 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் பற்றி எரிந்து வருகிறது.

இந்தத் தீ விபத்தால், அடா்ந்த வனப் பகுதியில் உள்ள பல நூறு ஏக்கா் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள உயிரினங்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அடா்ந்த வனப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்காகச் சென்ற மா்ம நபா்கள் வைத்த தீ வனப் பகுதியை தீக்கிரையாக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட வனத் துறையினா் காட்டுப் பகுதியில் முகாமிட்டு தீயை அணைக்க போராடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com