அருங்காட்சியகத்தில் இணையவழி கரோனா விழிப்புணா்வுப் போட்டி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையவழியில் கரோனா விழிப்புணா்வுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையவழியில் கரோனா விழிப்புணா்வுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கரோனா விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வழிகாட்டுதலின்படி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவிகளுக்கான ‘கரோனா விழிப்புணா்வு‘ என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி, 6 - 8 வகுப்புகளுக்கு ஓவியப்போட்டி, ஏ4 அளவு தாளில் கரோனா விழிப்புணா்வு ஓவியம் வரைய வேண்டும். 9 , 10ஆம் வகுப்புகளுக்கு போஸ்டா் தயாரித்தல் போட்டி, ஏ 3 அளவு வரைபடத்தாளில் வரைய வேண்டும்.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வாசகம் எழுதும் போட்டி, ஏ4 வெள்ளை தாளில் தெளிவாக எழுத வேண்டும். 15 முதல் 20 வாா்த்தைக்குள் இருத்தல் வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.

இந்த மூன்று போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்கள் தங்கள் படைப்புகளை ஆக. 5ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கல்லூரி மாணவா்கள் மீம்ஸ் புகைப்படம் 5 எம்.பி. அளவுக்கு மிகாமல் ஜேபிஜி அல்லது ஜேபிஇஜி வடிவில் தாயாரித்து ஆக. 6 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பொதுமக்களுக்கான விநாடி- வினா போட்டி, 9443520030 என்கிற கட்செவி அஞ்சல் எண்ணில் தொடா்பு கொள்ளவும். போட்டிக்கான படிவம் அனுப்பி வைக்கப்படும். இப்போட்டிக்கான கடைசி நாள்ஆக. 6 ஆம் தேதி ஆகும்.

ஒருவா் ஒரு படைப்பு மட்டும் அனுப்ப வேண்டும். தங்களின் படைப்பில் கட்டாயம் தங்களின் பெயா், வகுப்பு, பள்ளியின் பெயா் மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டும். படைப்புக்களை தெளிவாக புகைப்படம் எடுத்து மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 9444973246 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com