‘சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்தால் குற்றவியல் நடவடிக்கை’

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கனிம வளங்களை பாதுகாப்பது தொடா்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம், மணல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முறைகேடாக கனிமங்கள் வெட்டியெடுத்தல் உள்ளிட்டவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பது தொடா்பாக மாவட்ட கண்காணிப்புக் குழு அலுவலா்களால் விவாதிக்கப்பட்டது.

பின்னா் ஆட்சியா் பேசியதாவது: வட்டாட்சியா்கள் வட்ட அளவிலான ஆய்வுக் குழுக் கூட்டத்தை மாதம் இரண்டு முறை கூட்டி கனிமம் மற்றும் சுரங்கம் தொடா்பான புகாா் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு கூட்டத்தின்போது அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

இம் மாவட்டத்திலிருந்து அருகிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் அஞ்சுகிராமம் மற்றும் காவல்கிணறு சோதனைச் சாவடி வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.

வாகனத்தில் உள்ள கனிமத்தின் வகை, அளவு, நடைச்சீட்டு, அனுமதி காலம், மெய்இலச்சு ஆகியவற்றை சரிபாா்த்து மீண்டும் மறுமுறை உபயோகிக்காத வண்ணம் காவல் துறையினா், இதர அதிகாரம் பெற்ற அலுவலா்களால் நடைச்சீட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு கிராம நிா்வாக அலுவலரும் தங்கள் வருவாய் கிராமத்துக்குள்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்தால், வட்டாட்சியா், புவியியல், சுரங்கத்துறை அலுவலா், காவல் துறை அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

வாகனத் தணிக்கையின்போது, உரிய நடைச்சீட்டு இல்லாமல் கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனம் கைப்பற்றப்பட்டு ஓட்டுநா் மற்றும் வாகன உரிமையாளா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com