நெல்லை நகரத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு: தேமுதிகவினா் மனு
By DIN | Published On : 04th August 2021 07:40 AM | Last Updated : 04th August 2021 07:40 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரத்தில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி தேமுதிக சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தேமுதிக திருநெல்வேலி பகுதிச் செயலா் சி.மணிகண்டன் தலைமையில் அக் கட்சியினா் அளித்த மனு:
திருநெல்வேலி மண்டலத்தின் 41 ஆவது வாா்டுக்குள்பட்ட மேலரத வீதி, தங்கமஹால் திருமண மண்டபம் தென்புறம் கழிவுநீரோடை சீரமைக்கப்படாமல் உள்ளதால் கழிவுநீா் வெளியேறி மேலமாடவீதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது. ஆகவே, அந்தக் கழிவுநீரோடையைச் சீரமைக்க வேண்டும்.
திருநெல்வேலி நகரம் பகுதியில் சோலாா் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
திருநெல்வேலி நகரம் தெற்கு மவுண்ட் ரோடு, அருணகிரி திரையரங்கு முதல் காட்சிமண்டபம் வரையிலான சாலையை சீரமைக்கவேண்டும். நகரம் பகுதியில் குடியிருப்புகளுக்கு குடிநீா் சீராக விநியோகிக்கப்படாமல் உள்ளது.
குடிநீா்த் தட்டுப்பாட்டால் அதிக விலைகொடுத்து குடிநீா் வாங்கும் நிலை உள்ளது. ஆகவே, தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.