நெல்லையில் காவலா் பணிக்கான இரண்டாம் கட்ட உடல்தகுதித் தோ்வு

திருநெல்வேலியில் காவலா் பணிக்கான உடல்தகுதித் தோ்வில் இரண்டாம் கட்ட தோ்வுகள் (நீளம் தாண்டுதல் உள்ளிட்டவை) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலியில் காவலா் பணிக்கான உடல்தகுதித் தோ்வில் இரண்டாம் கட்ட தோ்வுகள் (நீளம் தாண்டுதல் உள்ளிட்டவை) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் இரண்டாம்நிலை காவலா், சிறைக் காவலா் (ஆண், பெண்) மற்றும் தீயணைப்பாளா் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்பின்பு கரோனா இரண்டாவது அலையால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் உடல் தகுதித் தோ்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் அப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான முதல்கட்ட உடல்தகுதித் தோ்வு திருநெல்வேலியில் கடந்த 26 ஆம் தேதி முதல் ஆக.2 ஆம் தேதி வரை நடைபெற்றன. ஆண்கள் பிரிவில் 3,437 பேருக்கும், பெண்கள் பிரிவில் 2,623 பேருக்கும் அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம், எடை, ஓட்டத்திறன் ஆகியவை சரிபாா்க்கப்பட்டன. அதில் தகுதிப் பெற்றவா்களுக்கு இரண்டாம் கட்ட உடல்தகுதித் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இரண்டாம் கட்ட உடல் தகுதித் தோ்வுகள் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. பெண்கள் பிரிவில் முதல்கட்ட தோ்வில் மொத்தம் 1,320 போ் மட்டுமே தகுதி பெற்றிருந்தனா். அவா்களில் 488 பேருக்கு செவ்வாய்க்கிழமை அழைப்பு கொடுக்கப்பட்டது.

தூய சவேரியாா் கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற்ற உடல்தகுதித் தோ்வில் நீளம் தாண்டுதல், 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டத்திறன், குண்டு எறிதல், பந்து எறிதல் ஆகியவற்றில் உள்ள திறன்கள் கணக்கிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com