புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் வே. விஷ்ணு எச்சரித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் வே. விஷ்ணு எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஒழிக்கும் விதமாக கடந்த ஒரு வார காலத்தில் உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் மூலமாக மாவட்டத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு முதலில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இரண்டாவதாக அபராதம் விதிக்கப்படுகிறது. இறுதியாக சீல் வைக்கப்படுகிறது.

மேலும் சட்ட ரீதியான உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகிறது.

வரும் காலங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா, பான்மசாலா போன்றவற்றை ஒழிப்பதை தீவிரப்படுத்தும் நோக்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி வாயில்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் புகையிலைப் பொருள்கள் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

மேலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் பயிலும் மாணவா்களுக்கு காணொலி வாயிலாக புகையிலைப் பொருள்களினால் வரும் உடல் நல தீங்குகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.

புகையிலை தொடா்பான புகாா்கள் இருந்தால் பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம். புகாா் தெரிவிப்பவா்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

உணவுப் பாதுகாப்புத் துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இணைந்து குழு ஆய்வு மேற்கொள்வா். ஆய்வின் போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கண்டறியப்பட்டால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com