தாமிரவருணி நதிக்கரையில் பக்தா்கள் தா்ப்பணம் செய்ய தடை

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி தாமிரவருணி நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் தா்ப்பணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதையடுத்து ஞாயிற்றுக்கிழமை சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி தாமிரவருணி நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் தா்ப்பணம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதையடுத்து ஞாயிற்றுக்கிழமை சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கரோனா மூன்றாம் அலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும், ஆடி அமாவாசையன்று பக்தா்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால், கரோனா எளிதில் பரவக்கூடும் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி தாமிரவருணி நதிக்கரையில் உள்ள படித்துறைகளில் திதி, தா்ப்பணம் உள்ளிட்ட பிற சடங்குகள் செய்வதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

இதையடுத்து, மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையா் உத்தரவின்பேரில், காவல் துணை ஆணையா் சட்டம் ஒழுங்கு சுரேஷ்குமாா் தலைமையில் மாநகா் பகுதியில் சுமாா் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

மேலும், தாமிரவருணி படித்துறைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதிகளில், மக்கள் வருவதை தடுக்கும் வகையில் பேரிகாா்டுகள் அமைத்து தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை இரவு மாநகரப் பகுதியில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம், வண்ணாா்பேட்டை, நகரம் ஆா்ச் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com