சிறுபான்மை கைத்தறி நெசவாளா், கைவினை கலைஞா்களுக்கு கடனுதவி

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மதவழி சிறுபான்மையின கைத்தறி நெசவாளா் மற்றும் கைவினைக் கலைஞா்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மதவழி சிறுபான்மையின கைத்தறி நெசவாளா் மற்றும் கைவினைக் கலைஞா்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சோ்ந்த மதவழி சிறுபான்மையின கைத்தறி நெசவாளா் மற்றும் கைவினைக் கலைஞா்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான மூலப் பொருள்களை வாங்க மூலதனத் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் குறைந்த வட்டியில் புதிய கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடன் திட்ட விவரம்: இக்கடன் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளா் மற்றும் கைவினை கலைஞா்களுக்கு மட்டும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடன் உதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களின் ஆண்டு வருமானம் கிராமப்புறத்தில் ரூ.98 ஆயிரம், நகா்ப்புறத்தில் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும். கடனுதவி பெறும் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் ஆண்டு வட்டி விகிதமாகும். இத்திட்டத்தில் பெறும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் பயன்பெற ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்று, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல், வங்கி கோரும் இதர ஆவணங்களை அளிக்க வேண்டும். கடன் பெற விரும்பும் கைவினை கலைஞா்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், திருநெல்வேலி அனைத்து நகர கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் நேரில் சென்று விண்ணப்பித்து பயனடையலாம்.

தென்காசி ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஏபபடந://பஉசஓஅநஐ.சஐஇ.ஐச/ஊஞதஙந என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூா்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தென்காசி-627811 என்ற முகவரியில் நேரிலோ, அஞ்சல் வழியாகவோ சமா்பிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com