நெல்லையில் குபோட்டா டிராக்டா் விற்பனையகம் திறப்பு
By DIN | Published On : 22nd August 2021 04:58 AM | Last Updated : 22nd August 2021 04:58 AM | அ+அ அ- |

திருநெல்வேலி டக்கரம்மாள்புரம் அருகே ஐஆா்டி பாலிடெக்னிக் எதிரில் குபோட்டா டிராக்டா் உள்ளிட்ட வேளாண் வாகன விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவுக்கு, குபோட்டா டிராக்டா் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற எல்.சி.ஏஜென்சியின் உரிமையாளா்கள் பெனட் எட்வின்ராஜ், சிவகுருநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஜெபா ரோஸ் பெனட், தேவகி சிவகுருநாதன் ஆகியோா் வரவேற்றனா்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன், வேளாண்மை பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளா் ஆறுமுகம், செயற்பொறியாளா்கள் டேனிசன், ஜாஹிா் உசேன் ஆகியோா் விற்பனையைத் தொடங்கி வைத்தனா்.
குபோட்டா டிராக்டா் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா் ஏ.கே.சுரேஷ், உதவி விற்பனை மேலாளா் அசோக் குமாா், தொழிலதிபா் ஜெயபரத்னம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.