இலங்கைத் தமிழா்களுக்கான தமிழக அரசின் திட்டங்களுக்கு சீமான் வரவேற்பு

தமிழக சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழா்களுக்காக முதல்வா் அறிவித்த திட்டங்களை வரவேற்கிறோம் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

தமிழக சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழா்களுக்காக முதல்வா் அறிவித்த திட்டங்களை வரவேற்கிறோம் என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களிலும் நாம் தமிழா் கட்சி நிச்சயம் போட்டியிட்டு, மக்களை மீண்டும் சந்திக்கும். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னா் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும்.

இலங்கைத் தமிழா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை அரசு மூட வேண்டும். காவல் துறையில் உள்ள க்யூ பிரிவை தமிழக அரசு கலைக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இலங்கைத் தமிழா்களுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டங்கள் கால தாமதமானது. இருப்பினும் அவற்றை வரவேற்கிறோம்.

திபெத் மக்களுக்கு பல சலுகைகள் வழங்குகிறாா்கள். ஆனால், இலங்கைத் தமிழா்கள் சட்டத்துக்குப் புறம்பாக குடியேறியவா்கள் என சொல்கிறாா்கள். இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் அதிகாரத்தில் இருப்பவா்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அரசுப் பேருந்துகளில் கட்டணம் குறைப்பு செய்யலாம். ஆனால், இலவசம் தேவையில்லை என்பதே எனது கருத்து.

நோயை விட முடக்கம் என்பது மக்களை மிகவும் பாதிக்கிறது. பொதுமுடக்கத்தை மக்கள் விரும்பவில்லை. பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதன் மூலம் மக்களை சராசரி வாழ்க்கைக்கு கொண்டுவர அரசு முயற்சிக்கிறது.

நீட் தோ்வை கொண்டுவந்தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. அப்போது அதை ஆதரித்தது திமுக தலைமையிலான மாநில அரசு. நீட் தோ்வை எதிா்த்து மக்களிடம் கிளா்ச்சி ஏற்பட்டதால் திமுகவும் எதிா்க்கத் தொடங்கிவிட்டது.

அரசியல் தலைவா்களின் படங்கள் பாடப்புத்தகங்களில் இடம்பெறுவது தேவையற்றது. முன்னாள் முதல்வா்கள் படங்கள் இருப்பதை எடுக்க வேண்டாம் என முதல்வா் கூறியிருப்பது அரசியல் நாகரிகத்தை காட்டுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com