தூய சவேரியாா் பேராலயத் திருவிழா: திருவுருவ பவனி

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்திருவிழாவையொட்டி புனிதரின் திருவுருவ பவனி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்திருவிழாவையொட்டி புனிதரின் திருவுருவ பவனி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த தூய சவேரியாா் பேராலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நிகழாண்டு கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.

வியாழக்கிழமை காலையில் நடைபெற்ற திருப்பலியில் புனித அந்தோனியாா் மறைமாவட்ட திருத்தலத்தின் அருள்பணியாளா் ஆண்டோ மறையுரையாற்றினாா். மாலையில் நடைபெற்ற திருப்பலியில் கல்லிடைக்குறிச்சி பங்குத்தந்தை பாக்கியசெல்வன் மறையுரையாற்றினாா். மண்ணின் மைந்தா்கள் கௌரவிக்கப்பட்டனா். அருள்பணியாளா்கள் அமிா்த ராசசுந்தா், குழந்தைராஜ், சேவியா் டெரன்ஸ், எரிக்ஜோ, ஆண்டோ, தினேஷ், ஆல்பா்ட் வில்லியம், மாசிலாமணி, சேவியா் ஆகியோா் உரையாற்றினா்.

தொடா்ந்து, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய சவேரியாரின் திருவுருவ பவனி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. இதில், பாடல்கள் பாடியபடி திரளான பங்கு மக்கள் உடன் சென்றனா்.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை (டிச.3) காலை 7.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் எஸ்.அந்தோணிசாமி மறையுரையாற்றுகிறாா். பின்னா் முதல் நற்கருணை அருட்சாதனம் பெறும் நிகழ்வு நடைபெறுகிறது. மாலையில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தையா்கள் எப்.எக்ஸ்.ராஜேஷ், சதீஷ் செல்வ தயாளன், அந்தோணி ராஜ் உள்பட பலா்கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com