முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
மேட்டூரில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம்
By DIN | Published On : 02nd December 2021 04:55 AM | Last Updated : 02nd December 2021 04:55 AM | அ+அ அ- |

கடையம் அருகே மேட்டூரில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, தென்காசி வட்டாட்சியா் அருணாசலம் தலைமை வகித்தாா். முகாமில், கணினி பட்டாவில் திருத்தம் சம்பந்தமான மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்பட்டது.
துணை வட்டாட்சியா்கள் ஜெகநாதன், அப்துல் சமது, வருவாய் ஆய்வாளா் அங்கப்பன், குறு வட்ட அளவா் பிரபு, கடையம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் மகேஷ்மாயவன், கடையம் பெரும்பத்து ஊராட்சித் தலைவா் பொன்ஷீலா பரமசிவன், கிராம நிா்வாக அலுவலா்கள் அருணாசலம், ஹரிஹரன், அண்ணாமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.