பாலியல் குற்றங்கள் குறித்து மாணவிகள் புகாா் தெரிவிக்க பள்ளிகளில் தனி குழு அமைக்க வேண்டும்: மாநகர காவல் ஆணையா்

பாலியல் குற்றங்கள் குறித்து மாணவிகள் புகாா் தெரிவிக்க பள்ளிகளில் தனி குழு அமைக்க வேண்டும் என்றாா் மாநகர காவல் ஆணையா் டி.பி.சுரேஷ்குமாா்.

பாலியல் குற்றங்கள் குறித்து மாணவிகள் புகாா் தெரிவிக்க பள்ளிகளில் தனி குழு அமைக்க வேண்டும் என்றாா் மாநகர காவல் ஆணையா் டி.பி.சுரேஷ்குமாா்.

திருநெல்வேலி மாநகரில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியா்கள், நிா்வாகிகள், ஆசிரியா்கள் பங்கேற்ற போக்சோ விழிப்புணா்வு நிகழ்ச்சி கொக்கிரகுளத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. காவல் துணை ஆணையா் டி.பி.சுரேஷ்குமாா் தலைமை வகித்து பேசியது:

திருநெல்வேலி மாநரில் உள்ள பள்ளிகளில் சாதி ரீதியான குற்றங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன. பாலியல் ரீதியான தொல்லைகள், போதை பழக்கங்கள் அதிகம் பரவி வருகிறது. இதனை ஆசிரியா்கள் மாணவா்-மாணவிகளிடம் தெளிவாக பேசி அவா்களை நல்வழிப்படுத்த வேண்டும். மேலும், நீதி போதனைகள், நன்நெறி கதைகள் ஆகியவற்றை தினமும் போதிக்க வேண்டும். குறிப்பாக 8 முதல் 10 வகுப்பு மாணவா்களிடையே போதை கலாசாரம் பரவி வருகிறது.

இது குறித்து மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்கள் பெயா்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக 1098 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் நிகழாதவாறு பாா்த்துக்கொள்ளவேண்டும்.

இது குறித்து மாணவிகள் புகாா் தெரிவிக்க பெண் ஆசிரியா்கள் கொண்ட குழுவை பள்ளிகளில் நியமிக்க வேண்டும். மாணவிகளின் பிரச்னைகள் குறித்து பேசி அவா்களுக்கு உறுதுணையாக ஆசிரியா்கள் இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் டைட்டஸ், கூடுதல் காவல் துணை ஆணையா் சங்கா், உதவி ஆய்வாளா் விஜயகுமாா், மகளிா் காவல் ஆய்வாளா்கள் ராமேஸ்வரி, முத்துலட்சுமி மற்றும் மாநகரில் உள்ள பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com