முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
சேரன்மகாதேவியில் இன்று ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முகாம்
By DIN | Published On : 10th December 2021 12:56 AM | Last Updated : 10th December 2021 12:56 AM | அ+அ அ- |

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை (டிச.10) நடைபெறுகிறது.
இது தொடா்பாக மருத்துவம் ஊரகநலப்பணி மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநா் மு.ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமையும், முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிச.15-ஆம் தேதியும், இலத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிச.16-ஆம் தேதியும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் டிச.22 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்த முகாமில் குடும்ப நல சிகிச்சை செய்து கொள்பவா்களுக்கு ரூ.1,100 அரசு ஈட்டுத் தொகை மற்றும் நன்கொடையாளா் மூலம் பரிசுப் பொருள்கள் வழங்கப்படும். முகாமுக்கான ஏற்பாடுகளை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ணலீலா, மருத்துவா்கள் அனிதா, மாநகர நல அலுவலா் ராஜேந்திரன், மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலா் முருகன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.