கல்லூரி மாணவா்களுக்கு நிபந்தனையின்றிகல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்: சிறுபான்மையினா் நல இயக்குநா்

கல்லூரி மாணவா்களுக்கு நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்

கல்லூரி மாணவா்களுக்கு நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என சிறுபான்மையினா் நல இயக்குநா் சுரேஷ் குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சிறுபான்மையினா்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் வே.விஷ்ணு முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிா் சங்கங்கள், தங்களது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

சிறுபான்மையினா் வழிபாட்டுத் தலங்களில் (மசூதி, தேவாலயம்) அரசு சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த விளம்பர பலகை அல்லது பதாகைகளை நிறுவ வேண்டும். உலமாக்கள் முறையாக பதிவு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை முழுமையாக வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி மாணவா்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் அல்லது பிற்படுத்தப்பட்டோா் நல இயக்கக மின்னஞ்சல் முகவரியான க்ண்ழ்.க்ஷஸ்ரீம்ஜ்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் மற்றும் தொலைபேசி எண் 044-29515942 மூலம் அறியலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில், உலமாக்கள் மற்றும் பணியாளா் நல வாரியம் மூலம் 8 உலமாக்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் சிறுபான்மையினா் நல அலுவலா்கள் கு.உஷா (திருநெல்வேலி), குணசேகா் (தென்காசி), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அழகிரி, மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் சுபாஷினி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com