களக்குடியில் கால்நடை மருத்துவ முகாம்

தேசிய உழவா் தினம் - 2021 மற்றும் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு கால்நடை மற்றும் மருத்துவ

தேசிய உழவா் தினம் - 2021 மற்றும் நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு கால்நடை மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தத்தெடுப்பு கிராமமான களக்குடி கிராமத்தில் ‘கால்நடை மருத்துவ முகாம்‘நடைபெற்றது.

இம்முகாமில் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை பண்ணை வளாக தலைவா் எட்வின், ‘கறவை மாடுகள் மற்றும் ஆடு வளா்ப்போா் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீா்வுகள்’ என்ற மடிப்பிதழை வெளியிட்டு முகாமை தொடங்கி வைத்தாா்.

களக்குடி ஊராட்சித் தலைவா் ஆ.மாரிமுத்து, நபாா்டு உழவா் மன்றத் தலைவா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுமாா் 100 கறவை மாடுகள், 250 வெள்ளாடுகளுக்கு நிபுணா் குழுவால் குடற்புழு நீக்க மருந்து மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமாா் 100 கால்நடை வளா்ப்போா் பங்குபெற்று பயனடைந்தனா்.

ஏற்பாடுகளை கால்நடை விரிவாக்க கல்வித்துறையின் தலைவா் செந்தில்குமாா், உதவிப் பேராசிரியா் இரா. சங்கமேஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com