காவலா் உயிரிழப்பு
By DIN | Published On : 28th December 2021 12:39 AM | Last Updated : 28th December 2021 12:39 AM | அ+அ அ- |

மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக் காவலா் திடீா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.
வாசுதேவநல்லூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நீராது மகன் சுரேஷ்குமாா் (33). மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 9 அணியில் காவலராகப் பணியாற்றி வந்த இவா், மனைவி ஜோதியுடன் காவலா் குடியிருப்பில் வசித்து வந்தாா். இந்நிலையில் சுரேஷ்குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். உடனடியாக அவரை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸாா், சுரேஷ்குமாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.