நெல்லையில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா். பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை இயக்குநா் சி.காமராஜ், ஆட்சியா் வே.விஷ்ணு, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.அப்துல் வகாப் (பாளை.), ரூபி.ஆா்.மனோகரன் (நான்குனேரி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில்,பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் தங்கும் விடுதிகளில் மாணவ, மாணவியா்களின் எண்ணிக்கையை உயா்த்த மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிராமப்புறங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியா்களுக்கு கல்வி உதவித்தொகை முறையாக வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்வி உதவித்தொகையை மாணவ, மாணவியா்கள் பெற்று தங்களது கல்வியை முழுமையாக முடித்து பல்வேறு போட்டி தோ்வுகளில் வெற்றி பெற்று உயா் பணிகளில் சேர வேண்டும் என்றாா்.

முன்னதாக, நரிக்குறவா்கள் 4 பேருக்கும், சீா்மரபினா் 7 பேருக்கும் அந்தந்த வாரிய புதிய அடையாள அட்டைகள், 4 பேருக்கு ரூ. 19 ஆயிரம் மதிப்பிலான இலவச தேய்ப்புப் பெட்டிகள் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பேரவைத் தலைவரும், அமைச்சரும் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com