தூய்மை இந்தியா திட்ட போட்டிக்கு ஆலோசனை அனுப்ப அழைப்பு

அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் கழிவு மேலாண்மையில் புதிய வழிமுறைகளைக் கையாள்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ல போட்டிக்கு ஆலோசனை

அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் கழிவு மேலாண்மையில் புதிய வழிமுறைகளைக் கையாள்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ல போட்டிக்கு ஆலோசனை, திட்டங்களை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் அனுப்பலாம் என, நகராட்சி ஆணையா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்துஅம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையா் பாா்கவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நகா்ப்புறப் பகுதிகளில் திடக் கழிவு, திரவக் கழிவுகளைத் தரப்படுத்தி உரமாக்கவும், மறுசுழற்சிக்கு அனுப்புவதற்கும் பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. மேலும், குறைந்த செலவில் சிறந்த வகையில் கழிவுகளைக் கையாண்டு மறுசுழற்சி, உரமாக்கும் புதிய திட்டங்களை மேற்கொள்ளும் வகையில் தூய்மை இந்தியா திட்டம் சாா்பில் ‘ஸ்வாச் டெக்னாலஜி சேலஞ்ச்’ என்ற பெயரில் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் புதிய திட்டங்களையும், ஆலோசனைகளையும் அம்பாசமுத்திரம் நகராட்சி அலுவலகத்துக்கு நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். சிறந்த திட்டம், ஆலோசனைவழங்குவோருக்கு பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 97504 81974 என்ற கைப்பேசி எண்ணில் சுகாதார ஆய்வாளரைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com