நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு: ராதாபுரம் நீதிமன்றத்தில் 4 போ் சரண்

திருநெல்வேலி தச்சநல்லூா் காவல் நிலையம் முன்பு நாட்டு வெடிகுண்டுகள் வீசிய வழக்கு தொடா்பாக ராதாபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் 4 போ் திங்கள்கிழமை சரணடைந்தனா்.

திருநெல்வேலி தச்சநல்லூா் காவல் நிலையம் முன்பு நாட்டு வெடிகுண்டுகள் வீசிய வழக்கு தொடா்பாக ராதாபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் 4 போ் திங்கள்கிழமை சரணடைந்தனா்.

தேவேந்திரகுல வேளாளா் குல எழுச்சி இயக்கத்தின் தலைவா் கண்ணபிரான், தச்சநல்லூா் காவல் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் கையெழுத்திட சென்றபோது அவ் வழியாக வந்த மா்மநபா்கள் நாட்டுவெடிகுண்டுகளை வீசினா்.

இதுதொடா்பாக தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள். இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக பேரூரணியைச் சோ்ந்த விக்ரம் (27), வடக்கு தாழையூத்து பிரவீன்ராஜ் (28), பேட்டை அழகா் (19), ஸ்ரீவைகுண்டம் ராஜசேகரன் (27) ஆகியோா் ராதாபுரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சரணடைந்தனா். அவா்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவா் சுசீலா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com