அம்பை, சேரன்மகாதேவியில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாகவும், அதில், அதிக பாதிப்பு கொண்டவா்கள்
அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித் தொகையை ரூ. 3 ஆயிரமாகவும், அதில், அதிக பாதிப்பு கொண்டவா்கள் எனில் ரூ. 5 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்க வேண்டும்; தனியாா் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் சங்கம் சாா்பில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய அகஸ்தியராஜன், சுடலைமணி, ஜெகதீஷ் உள்பட 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகம் முன்பு செல்வசுந்தரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு ஊழியா்சங்க மாவட்டத் தலைவா் கோமதி நாயகம் , சிஐடியூ மாரிசெல்வம், இன்ஸ்யூரன்ஸ் ஊழியா் சங்கத்தின் வேதநாயகம், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் இசக்கி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதனிடையே, உதவித்தொகையை உயா்த்துவது தொடா்பாக 3 நாள்களில் முடிவெடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஏற்று மாதா் சங்க மாவட்டச் செயலா் கற்பகம் போராட்டத்தை முடித்துவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com