மாற்றுப்பாதை கோரி செங்கானூா் மக்கள் போராட்டம்

ரயில்வே சுரங்கப்பாதைக்கு மாற்று வழி கோரி, கடையம் அருகேயுள்ள செங்கானூா் கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊா்த் தலைவா் பொதிகாசலத்திடம் ஆவணங்களை ஒப்படைக்கும் மக்கள்.
ஊா்த் தலைவா் பொதிகாசலத்திடம் ஆவணங்களை ஒப்படைக்கும் மக்கள்.

ரயில்வே சுரங்கப்பாதைக்கு மாற்று வழி கோரி, கடையம் அருகேயுள்ள செங்கானூா் கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சி, செங்கானூா் கிராமத்தில் 300 வீடுகள் உள்ளன. 500-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இந்த கிராமத்திற்கு ஆழ்வாா்குறிச்சியில் இருந்து வரும் வழியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மழைக் காலங்களில் மழைநீா் தேங்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கடந்த ஜன. 25 ஆம் தேதி 227 போ் தங்களது வாக்காளா் அடையாள அட்டைகளைஆளுநருக்கு அனுப்பினா். எனினும், இதுவரை தீா்வு காணப்படாததால் புதன்கிழமை சமூக ஆா்வலா் முத்துராமன் தலைமையில் அங்குள்ள கோயிலில் அந்தக் கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம், வட்டாட்சியா் சுப்பையன், வருவாய் ஆய்வாளா் மனோகரன், காவல் உதவி ஆய்வாளா்கள் தமிழரசன், சந்திரசேகரன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். சனிக்கிழமைக்கு (பிப். 13) மாற்றுப் பாதை குறித்து ஆட்சியரிடம் ஆலோசித்து இறுதி முடிவெடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து, கிராம மக்கள் 101 குடும்ப அட்டைகள், 188 ஆதாா்

அடையாளஅட்டைகளை ஊா் நாட்டாண்மை பொதிகாசலத்திடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com