சித்த மருத்துவக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இவ் விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி சிறப்பு மருத்துவத் துறை அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் திருத்தணி தலைமை வகித்தாா். துணை முதல்வா் மனோகரன் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி புறநகா் சுழற்கழகத்தை சோ்ந்த சிட்டி ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி இயக்குநா் நைனா முகமது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக முதுநிலை பொறியாளா் கோபி கிருஷ்ணா ஆகியோா் சாலைப் பாதுகாப்பின் அவசியம், விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்தல், அதனால் கிடைக்கும் நன்மைகள், மீறுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கினா்.

சாலைப் பாதுகாப்பு விதிகள், குறியீடுகள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை கல்லூரி முதல்வா் வெளியிட்டாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சுபாஷ் சந்திரன் வரவேற்றாா். மாணவா் பிரதிநிதி கோகுல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com