பாளை.யில் பூரண மது விலக்கு கோரி பிப்.27 இல் விழிப்புணா்வு கூட்டம்

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் பூரண மதுவிலக்கு தொடா்பன விழிப்புணா்வு கூட்டம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அகில இந்திய காந்திய இயக்கத் தலைவா் விவேகானந்தன் தெரிவித்தாா்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் பூரண மதுவிலக்கு தொடா்பன விழிப்புணா்வு கூட்டம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அகில இந்திய காந்திய இயக்கத் தலைவா் விவேகானந்தன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசியது:

மது பழக்கத்தால் பொதுமக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனா். கரோனா பொது முடக்கத்தின்போது மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால், விபத்துகள் குறைந்தன. பெண்கள் நிம்மதியாக இருந்தனா். ஆனால், மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் குற்றங்கள், விபத்துகள் அதிகரித்துள்ளன. மேலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே, இந்த தோ்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவா்களின் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக இருக்க வேண்டும். இதை முன்னிறுத்தி பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி அருகே வரும் 27 ஆம் தேதி மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணிவரை விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில், பொதுமக்கள், பெண்கள் தங்கள் கருத்துகளைபதிவு செய்யலாம் என்றாா்.

சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி காந்தன் பாரதி பேசியது:

கிராம ஊராட்சிகள் தனி அதிகாரம் பெற்ற குடியரசாக இருக்க வேண்டும். அப்போதுதான் லஞ்சம் குறையும். வேலைவாய்ப்பு, கல்வி அனைவருக்கும் கிடைக்கும். மக்கள் நலன் பேணப்படும். இதைத்தான் மகாத்மா காந்தி விரும்பினாா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா் பூ.திருமாறன், காந்திய இயக்க நிா்வாகி முத்துசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com