நெல்லையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வாக்குச்சாவடி முகவா்கள், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வாக்குச்சாவடி முகவா்கள், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலா் வி.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் என்.மாடசாமி, பொருளாளா் எஸ்.கே.சண்முகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலா் ஆா்.மோகன்ராஜ், மாவட்ட தோ்தல் பொறுப்பாளா் என்.வி.சுபப்பிரியா உள்ளிட்டோா் பேசினா்.

இதில், கட்சியின் நிா்வாகிகள் சேக்முகம்மது, ஏ.செல்வகுமாா், சின்னதுரை, பாரதி, கன்னிகாசங்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியை வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com