மானூா் அருகே விபத்து: இளைஞா் பலி
By DIN | Published On : 07th January 2021 06:27 AM | Last Updated : 07th January 2021 06:27 AM | அ+அ அ- |

மானூா் அருகே அழகியபாண்டியபுரம் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகேயுள்ள டி.என்.புதுக்குடி பகுதியைச் சோ்ந்த சங்கரலிங்கம் மகன் ரமேஷ் (28). மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றி வந்தாா். இவா் தனது மனைவி ஆனந்தசெல்வி, 2 மகன்களுடன் தச்சநல்லூரில் வசித்துவந்தாா். சில நாள்களுக்கு முன்பு பைக்கில் சங்கரன்கோவில் சென்றுவிட்டு திருநெல்வேலிக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.
அழகியபாண்டியபுரம் அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து, குடிநீா்க் குழாய் பதிக்க தோண்டப்பட்டிருந்த பள்ளத்துக்குள் பாய்ந்ததாம். இதில் காயமடைந்த ரமேஷை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.