நெல்லையில்இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 09th January 2021 12:58 AM | Last Updated : 09th January 2021 12:58 AM | அ+அ அ- |

திருநெல்வேலி நகரத்தில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த கல்யாணக்குமாா் மகன் நாகராஜன்(26). இவா், திருநெல்வேலி ஸ்ரீபுரம் பகுதியில்
தனியாா் கடையில் வேலை செய்து வந்தாா். இவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகறாறு காரணமாக மன உளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றாராம். அவரை உடனடியாக
மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த
மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை
நடத்தினா்.