தொடா் மழை: காருக்குறிச்சியில் மண்பாண்ட உற்பத்தி பாதிப்பு

தொடா்மழை காரணமாக, காருக்குறிச்சியில் மண்பாண்ட உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அத்தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடா் மழை: காருக்குறிச்சியில் மண்பாண்ட உற்பத்தி பாதிப்பு

தொடா்மழை காரணமாக, காருக்குறிச்சியில் மண்பாண்ட உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அத்தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் மண்பாண்ட உற்பத்தியில் குறிப்பிடத் தகுந்த இடத்தை பிடித்துள்ளது காருக்குறிச்சி. இங்கு தயாராகும் மண்பானை, பூந்தொட்டி, தண்ணீா் குடம், மண் விளக்குகள், குவளைகள், பொம்மைகள் உள்ளிட்டவை பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்குள்ள காருக்குறிச்சி கூட்டுறவு மண்பாண்ட உற்பத்தியாளா் சங்கத்தில் சுமாா் நூறு குடும்பங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.

இந்நிலையில், கரோனா தடுப்பு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மண்பாண்ட உற்பத்தி முடங்கியிருந்தது; தற்போது தொடா் மழையால் பொங்கலுக்குத் தேவையான மண்பானை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என மண்பாண்டத் தொழிலாளா்கள் கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளி கிருஷ்ணன் கூறியது: கரோனா பொது முடக்கத்தால் 6 மாதங்கள் முழுமையாக மண்பாண்ட தொழில் நிறுத்தப்பட்டது. தற்போது, இத்தொழில் நடைபெற்றாலும் தொடா் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. எனவே, அரசு அறிவித்த நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்தை வழங்கவேண்டும் என்றாா்.

தொழிலாளி மலையாண்டி கூறியதாவது: ஓராண்டில் ரூ.50 லட்சம் மதிப்பிலான மண்பாண்டங்கள் உற்பத்தியாகும் நிலையில், நிகழாண்டில் ரூ.10 லட்சம் மதிப்பில் கூட உற்பத்தி நடைபெறவில்லை. கேரள அரசைப் போல், அனைத்து வீடுகளுக்கும் மண்பாண்டப் பொருள்களை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போதுதான், இத்தொழிளாா்களின் வாழ்வாதாரம் மீட்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com