மேலப்பாளையத்தில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 12) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 12) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலப் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யும் கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்தில் தற்போது பெய்து வரும் தொடா் கனமழையின் காரணமாகவும், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைப் பகுதிகளிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள உபரி நீா்வரத்தின் காரணமாகவும் தாமிரபரணி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதனால் ஆற்றின் உள்புறம் உள்ள தண்ணீா் ஏற்றும் கிணறுகள் அனைத்தையும் மூழ்கடித்த நிலையில் வெள்ளம் செல்வதால் மின்மோட்டாரை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் மண்டலத்தில் வாா்டு எண் 28 முதல் 38 வரையிலான பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜன. 12) மட்டும் குடிநீா் விநியோகம் வழங்க இயலாது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதோடு, கொதிக்க வைத்து பருக வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com