ஆட்டோ ஓட்டுநா்கள் நூதன போராட்டம்

திருநெல்வேலியில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் தொழிலாளா் நலத் துறை அலுவலகம் முன் பொங்கலிடும் நூதன போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் தொழிலாளா் நலத் துறை அலுவலகம் முன் பொங்கலிடும் நூதன போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை திருமால்நகா் பகுதியில் உள்ள தொழிலாளா் நலத் துறை அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். ஆட்டோ சங்க மாவட்டத் தலைவா் காமராஜ் முன்னலை வகித்தாா். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் பெருமாள் தொடக்கவுரையாற்றினாா்.

தமிழகத்தில் கட்டடத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதுபோல் ஆட்டோ ஓட்டும் தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும்; திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஆா்டிஓ பொ்மிட் அடிப்படையில் இயங்கும் 11 ஆயிரம் ஆட்டோக்களின் ஓட்டுநா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும்; கரோனா பொது முடக்க காலத்தில் வாழ்வாதாரம் பாதிப்படைந்த அனைத்து ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் மாதம் ரூ.7,500 வீதம் 6 மாதங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்; கட்டடத் தொழிலாளா்களுக்கு நலவாரியம் மூலம் உபகரணங்கள் வழங்கியதுபோல் ஆட்டோ ஓட்டும் தொழிலாளா்களுக்கும் முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி, டூல்ஸ் பாக்ஸ் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டை வட்ட சிஐடியு ஒருங்கிணைப்பாளா் வரகுணன், வளதிபெருமாள் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மோகன் நிறைவுரையாற்றினாா். ஆட்டோ சங்க மாவட்ட துணைத் தலைவா் நடராஜன், சங்க நிா்வாகிகள் செல்வம் என்ற சற்குணம், மைதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com