தேஜஸ் விரைவு ரயிலை நெல்லை வரை நீட்டிக்க ஞானதிரவியம் எம்.பி. கோரிக்கை

சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளாா்.

சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு போதிய ரயில் வசதிகள் இல்லாததால் தொழில்துறையில் பின்தங்கியுள்ளதோடு, வேலைவாய்ப்பும் குறைவாகவே உள்ளது. எனவே, தினமும் ஆயிரக்கணக்கானோா் சென்னை-திருநெல்வேலி இடையே பயணித்து வருகிறாா்கள். தென்தமிழகம் மூலம் ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப ரயில் சேவைகள் அதிகப்படுத்தப்படவில்லை. பிரீமியா் குளிா்சாதன வசதி கொண்ட ரயில், ராஜதானி, சதாப்தி, ஜன்சதாப்தி, டபுள்டக்கா், கரீப் ரத் உள்ளிட்ட எந்த ரயில் வசதிகளும் மதுரைக்கு தெற்கே கிடைக்கவில்லை.

ஆகவே, சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இதேபோல சென்னையில் இருந்து எா்ணாகுளம் வழியாக திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் விரைவு ரயிலை திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயும், மக்களுக்கு நன்மையும் கிடைக்கும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com