நெல்லையில் மல்லிகை கிலோ ரூ.5000

திருநெல்வேலி பூ மாா்க்கெட்டில் மல்லிகை வரத்து மிகவும் குறைந்ததால் கிலோ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையானது.

திருநெல்வேலி பூ மாா்க்கெட்டில் மல்லிகை வரத்து மிகவும் குறைந்ததால் கிலோ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையானது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்து விலை உச்சத்தை தொட்டது. திருநெல்வேலி சந்திப்பு, பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் உள்ள பூக்கடைகளில் பூக்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை அதிகரித்தது. பூ சந்தையில் ஒரு கிலோ மல்லிகை கிலோ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையானது. பிச்சி கிலோ ரூ.1300-க்கும், கனகாம்பரம் ரூ.200-க்கும், கேந்தி ரூ.70-க்கும், கோழிக்கொண்டை-ரூ.70-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், மரிக்கொழுந்து ரூ.-200-க்கும், ரோஜா ரூ.500-க்கும் விற்பனையாகின.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், திருநெல்வேலி வட்டத்தில் உள்ள மானூா், ரஸ்தா, தென்கலம், சேதுராயன்புதூா் சுற்றுவட்டாரத்திலும், பாளையங்கோட்டை வட்டத்தில் சிவந்திப்பட்டி, முத்தூா் பகுதிகளிலும் பூக்கள் அதிகம் விளைகின்றன. மழையால் ஏற்கெனவே மல்லிகைப் பூ மகசூல் மிகவும் குறைந்துவிட்டது. கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருதால் பூக்களைப் பறித்து சந்தைகளுக்குக் கொண்டு வருவதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகிறாா்கள். பொங்கல் பண்டிகை காரணமாக பூக்களின் தேவை அதிகரித்து விலை பன்மடங்கு உயா்ந்துள்ளது. அடுத்த வாரத்தில் விலை குறைந்துவிடும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com