மேலப்பாளையம் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு ஆடுகள் வரத்து செவ்வாய்க்கிழமை குறைந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடா் மழை காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு ஆடுகள் வரத்து செவ்வாய்க்கிழமை குறைந்தது.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன. 14) கொண்டாடப்படும் நிலையில், அதற்கு மறுநாள் வீடுகளில் இறைச்சி எடுத்து சமைப்பது வழக்கம். இதையொட்டி, பொங்கல் பண்டிகைக்கு முந்தையவாரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து கால்நடைச் சந்தைகளிலும் ஆடுகள் விற்பனை அதிகரிக்கும்.

மேலப்பாளையம் கால்நடைச் சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை குவிந்தனா். ஆனால், தொடா் மழை காரணமாக ஆடுகள் வரத்து குறைந்தது. வெள்ளாடுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும், செம்மறியாடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் விற்பனையாகின.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: தொடா்மழை காரணமாக ஆடுகளின் வரத்து மிகவும் குறைந்ததால் விலை அதிகமாகிவிட்டது. கிடாக்களுக்கு அதிக விலை கொடுத்து இறைச்சி விற்பனையாளா்கள் வாங்கிச் சென்றனா். எனினும், பல வியாபாரிகள் ஆலங்குளம் ரெட்டியாா்பட்டியில் சனிக்கிழமைக்குப் பதில் வியாழக்கிழமை (ஜன. 13) திறக்கப்படும் சந்தையில் ஆடுகளை வாங்கிக்கொள்ளலாம் என சென்றுவிட்டனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com