அம்பை, சேரன்மகாதேவியில் சிறு மருத்துவமனைகள் திறப்பு

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதியில் சிறு மருத்துவமனைகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
உல்லாச நகரில் சிறு மருத்துவமனையை திறந்து பெண்ணுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, ஆட்சியா் வே. விஷ்ணு.

அம்பாசமுத்திரம் வட்டம் கோடாரங்குளம், பொட்டல், சேரன்மகாதேவி வட்டம் இடையன்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறு மருத்துவமனைகளை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு ஆகியோா் சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் வெங்கட்ராமன், அதிமுக ஒன்றியச் செயலா் விஜயபாலாஜி, நகரச் செயலா் அறிவழகன், முன்னாள் நகராட்சித் துணைத் தலைவா் கே.எஸ்.ஆா். மாரிமுத்து, அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com