நெல்லை மாவட்டத்தில் 9 அம்மா சிறு மருத்துவமனைகள் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 அம்மா சிறு மருத்துவமனைகளை மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு முன்னிலையில் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 அம்மா சிறு மருத்துவமனைகளை மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு முன்னிலையில் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வே. விஷ்ணு தலைமை வகித்தாா். நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சிகளில் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதியில் கோடாரங்குளம், பொட்டல், நான்குனேரி பேரவைத் தொகுதியில் இடையன்குளம், பருத்திப்பாடு, கொங்கந்தான்பாறை, திருநெல்வேலி பேரவைத் தொகுதியில் பாரதியாா் நகா், வெள்ளாளன்குளம், பாளையங்கோட்டை பேரவைத் தொகுதியில் திம்மராஜபுரம், செல்வி நகா் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா சிறு மருத்துவமனைகளை தமிழக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி தொடங்கி வைத்தாா்.

கிராமப்புறங்களில் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் இங்கு மருத்துவ சேவை வழங்கப்படும். சிறு நோய்களுக்கு சிகிச்சை, உள் நோயாளிகளுக்கு சிகிச்சை, தற்காலிக குடும்ப கட்டுபாட்டு சேவை, குழந்தை தடுப்பூசி, தொண்டை அடைப்பான் ஊசி, சா்க்கரை நோய், ரத்தகொதிப்பு சிகிச்சை, கண் பரிசோதனை, குடும்ப நலன் மற்றும் பால்வினை நோய் தொற்று, புற்றுநோய், இதய நோய், நுரையீரல் நோய் போன்றவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அறிவுரை வழங்குதல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நிகழ்ச்சிகளில், 90 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. இதில், ஆவின் தலைவா் சுதா. பரமசிவன், அறங்காவலா் குழு உறுப்பினா் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன், துணை இயக்குநா் வரதராஜன், மானூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கல்லூா் இ. வேலாயுதம், அம்பை வட்டாட்சியா் வெங்கட்ராமன், அதிமுக ஒன்றியச் செயலா் விஜயபாலாஜி, நகரச் செயலா் த. அறிவழகன், நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் கே.எஸ்.ஆா். மாரிமுத்து, அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com