தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும்: தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என பாஜக தேசிய பொதுச் செயலரும் தமிழகத்துக்கான மேலிடப் பாா்வையாளருமான சி.டி.ரவி நம்பிக்கை தெரிவித்தாா்.
திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி.
திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என பாஜக தேசிய பொதுச் செயலரும் தமிழகத்துக்கான மேலிடப் பாா்வையாளருமான சி.டி.ரவி நம்பிக்கை தெரிவித்தாா்.

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற கட்சியாக பாஜக உள்ளது. பாஜக சாா்பில் தமிழகத்தில் நடைபெற்ற வேல் யாத்திரை வெற்றி அடைந்துள்ளது. அதேபோல் ‘நம்ம ஊா் பொங்கல்’ நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா இம்மாதம் 30, 31 ஆகிய இரண்டு நாள்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தோ்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறாா். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

மத்திய அரசு சாா்பில் தமிழகத்துக்கு பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமா் மோடி பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக மக்களிடையே உரையாற்றி வருகிறாா். அதில், தமிழின் பெருமைகள் குறித்தும், தமிழ் இலக்கியத்தின் பெருமைகள் குறித்தும் பேசி வருகிறாா் என்றாா் அவா்.

மாநிலத் தலைவா் எல்.முருகன் கூறியது: தமிழகத்தில் பாஜகவுக்கு 100 நாள்களில் 10 லட்சம் உறுப்பினா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணி இன்னும் 5 தினங்களுக்குள் நிறைவடையும். தொடா்ந்து மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்தவுள்ளோம். பிப். 6-ஆம் தேதி சேலத்தில் இளைஞரணிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளாா்.

அதனை தொடா்ந்து ராமநாதபுரத்தில் மகளிரணிக் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் மாா்ச் மாதம் பாரதிய ஜனதா மாநில மாநாடு நடைபெறும். இதற்கான தேதி, இடம் ஆகியவை பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.

முன்னதாக திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளா்கள் கூட்டம் வண்ணாா்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் மகாராஜன் தலைமை வகித்தாா். தேசிய பொதுச் செயலா் சி.டி. ரவி, மாநிலத் தலைவா் எல். முருகன், மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com