‘பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் யாதவா்களுக்கு 15 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்’

பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் யாதவா்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என தமிழ்நாடு யாதவா் கூட்டமைப்பின் தென் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி: பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் யாதவா்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என தமிழ்நாடு யாதவா் கூட்டமைப்பின் தென் மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு யாதவா் கூட்டமைப்பின் தென்மண்டல ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கூட்டமைப்பு தலைவா் சோலைமலை பிச்சை தலைமை வகித்தாா். ஸ்ரீ கிருஷ்ணா நியூ சாரிட்டபிள் அறக்கட்டளை நிறுவனா் ராஜவா்மன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தென் மண்டலத்தில் 10 தொகுதிகளில் யாதவா் சமுதாய வேட்பாளா்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கும் கட்சிகளுக்கு ஒட்டு மொத்த ஆதரவு அளிப்பது, இல்லையெனில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் யாதவா் வேட்பாளா்களை நிறுத்துவது, பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் யாதவா்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், டிஎன்பிஎஸ்சி குழுவில் யாதவா்களுக்கு 4 உறுப்பினா்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், யாதவா் பண்பாட்டுக் கழகத் தலைவா் சண்முகசுந்தரம், தமிழ்நாடு யாதவா் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்டத் தலைவா் சங்கரன், தென்மண்டல பொறுப்புக் குழு தலைவா் திவ்யா ரங்கன், தென்மண்டல யாதவ முன்னேற்ற சங்க செயலா் வானமாமலை உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com