ரூ.20ஆயிரம் லஞ்சம்: நெல்லை சுகாதாரத்துறை துணை இயக்குநரின் காா் ஓட்டுநா் கைது

ரூ.20ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருநெல்வேலி சுகாதாரத்துறை துணை இயக்குநா் அலுவலக காா் ஓட்டுநரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை மடக்கி பிடித்து கைது செய்தனா்.

ரூ.20ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருநெல்வேலி சுகாதாரத்துறை துணை இயக்குநா் அலுவலக காா் ஓட்டுநரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை மடக்கி பிடித்து கைது செய்தனா்.

இது குறித்து திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸாா் தரப்பில் கூறியது: திருநெல்வேலி குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் வேலாயுதம்(39) . இவா் தனது இரண்டு காா்களை பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத்துறை துணை இயக்குநா் அலுவலகத்திற்கு பள்ளி சிறாா் நல உதவி திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்கு விட்டுள்ளாா். இந்த ஒப்பந்தத்தை ஆண்டு தோறும் புதுப்பிக் வேண்டும்.

இந்நிலையில் இந்த ஒப்பந்தம் கடந்த 2016 இல் போடப்பட்டது. இதனை புதுப்பிக்க இவா் சுகாதாரத்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். இந்நிலையில் சுகாதாரத்துறை துணை இயக்குனரின் ஓட்டுநா் சங்கா்(34), ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க காா் ஒன்றுக்கு தலா ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம்.

இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் வேலாயுதம் புகாா் அளித்தாா். அதன்பேரில், ரசாயணக்கலவை தடவிய பணத்தை கொடுக்க வேலாயுதத்திடம் லஞ்ச ஒழிப்பு போலீசாா் அறிவுறுத்தியுள்ளனா். பின்னா், சங்கரிடம் பணத்தை தருவதாக ஒப்புக்கொண்ட வேலாயுதம், அவரைத் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது அவா், வேலாயுதத்தை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியாா் வங்கி முன்பு வருமாறு கூறியுள்ளாராம்.

அங்கு, சங்கரிடம், வேலாயுதம் பணத்தை கொடுக்கும்போது, மறைந்திருந்த, துணை கண்காணிப்பாளா் எஸ்கால் தலைமையிலான போலீஸாா் சங்கரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

இது போன்று அவா் வேறு யாரிடமும் லஞ்சம் பெற்றுள்ளாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com