200 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்
By DIN | Published On : 27th January 2021 12:46 AM | Last Updated : 27th January 2021 12:46 AM | அ+அ அ- |

மூலைக்கரைப்பட்டி, கடம்பன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
நான்குனேரி எம்எல்ஏ வெ.நாராயணன் கலந்துகொண்டு, 200 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் சங்கரலிங்கம், சிந்தாமணி முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமசுப்பு, மாணவரணிச் செயலா் ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.