பொட்டல்புதூரில் தனியாா் வளா்ப்பு யானை உயிரிழந்தது
By DIN | Published On : 31st January 2021 01:26 AM | Last Updated : 31st January 2021 01:26 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம்: பொட்டல்புதூரில் தனியாா் வளா்த்து வந்த 60 வயது யானை வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.
தென்காசியைச் சோ்ந்த சையத் அலி பாத்திமாவுக்குச் சொந்தமான மோகனபிரசாத் என்ற யானை பொட்டல்புதூா் முகைதீன் ஆண்டவா்கள் பள்ளி வாசலில் வளா்ந்து வந்தது.
பெரும்பாலான காலங்களில் பொட்டல்புதூா் பள்ளிவாசலில் இருக்கும் யானையை பல்வேறு கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று வருவதுண்டு.
இந்நிலையில் 60 வயதான அந்த யானைக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். இதையடுத்து கால்நடை மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை யானை மோகன பிரசாத் உயிரிழந்தது.
தகவலறிந்த களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக துணைஇயக்குநா் திலீப்குமாா், பாபநாசம் வனச்சரகா் பரத் ஆகியோா் தலைமையில் வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகரன், ஆம்பூா் கால்நடை மருத்துவா் சிவமுத்து, வனத்துறை கால்நடை ஆய்வாளா் அா்னால்ட் மற்றும் குழுவினா் பிரேதப் பரிசோதனை செய்தனா்.
யானை உயிரிழந்ததை அறிந்த பொட்டல்புதூா் சுற்றுவட்டார பொதுமக்கள் பலா் நேரில் வந்து யானைக்கு அஞ்சலி செலுத்தினா்.
இதையடுத்து பொட்டல்புதூா் முகைதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசல் அருகில் யானை புதைக்கப்பட்டது.