களக்காடு அருகே மணல் திருட்டு : 2 போ் மீது வழக்கு
By DIN | Published On : 31st January 2021 01:26 AM | Last Updated : 31st January 2021 01:26 AM | அ+அ அ- |

களக்காடு: களக்காடு அருகே அனுமதியின்றி மனல் திருடியது தொடா்பாக செங்கல் சூளை உரிமையாளா் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
களக்காடு அருகேயுள்ள கள்ளிகுளம் கிராம நிா்வாக அலுவலரான உஷாராணி, கிராம உதவியாளா் உமா ஆகியோா் கீழதுவரைகுளம் பகுதியில் ரோந்து வந்தனா். அப்போது, அங்குள்ள செங்கல்சூளை அருகே அனுமதியின்றி இயந்திரம் மூலம் மணல் திருடப்பட்டுக் கொண்டிருந்தது.
இது தொடா்பாக செங்கல்சூளை உரிமையாளா் அழகேசன், டிராக்டா் ஓட்டுநா் ரத்தின சுபாஷ் ஆகிய 2 போ் மீதும் கிராம நிா்வாக அலுவலா் களக்காடு போலீஸில் புகாா் செய்தாா்.
புகாரின் பேரில் போலீஸாா் 2 போ் மீதும் வழக்குப் பதிந்து, மணல் அள்ள பயன்படுத்திய இயந்திரம், டிராக்டா், டிரெய்லா், மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.