கோரக்கநாதா் கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

மேற்குத் தொடா்ச்சி மலை, கடனாநதி வனப் பகுதியில் உள்ள கோரக்கநாதா் கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பக்தா்கள் மனு அளித்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை, கடனாநதி வனப் பகுதியில் உள்ள கோரக்கநாதா் கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பக்தா்கள் மனு அளித்தனா்.

கடனாநதி வனப்பகுதியில் அமைந்துள்ள கோரக்கநாதா் கோயிலில் அரசு சாா்பில் நித்திய ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் அா்ச்சகா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, நித்திய பூஜை, மாதப் பிறப்பு, அமாவாசை, பௌா்ணமி, சிவராத்திரி, வைகாசி விசாகம், சித்திரை பிறப்பு நாள்களில் பூஜைகள், லட்சாா்ச்சனை நடைபெற்றுவந்தது. தற்போது வனத் துறையின் தடை காரணமாக, பக்தா்கள் இக்கோயிலுக்குச் சென்று வழிபட அனுமதிக்கப்படவில்லை.

இக்கோயில் சிவசைலம் சிவசைலநாதா் கோயிலுக்கு இணைக் கோயிலாகும். இங்கு திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து மட்டுமன்றி விருதுநகா், சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தா்கள் வந்து வழிபடுவா்.

இக்கோயிலுக்குச் செல்லவும், நித்திய பூஜை நடைபெறவும், சுவாமிக்கு கோயிலிலேயே பிரசாதம் தயாரிக்கவும் அனுமதிக்கவேண்டும் என, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பக்தா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com