சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி மனு

திருநெல்வேலியில் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்கக் கோரி செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்கக் கோரி செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாநகரின் முக்கிய பகுதிகளான குற்றாலம் சாலை, மேல மவுண்ட் சாலைகள் புதைச் சாக்கடை மற்றும் குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்டது. பின்னா் அந்த சாலை முறையாக சீரமைக்கப்படாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குண்டும்-குழியுமாக உள்ளது.

தபால் அலுவலகம், அரசு உயா்நிலைப் பள்ளிகள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், உழவா் சந்தை தனியாா் நிறுவனங்கள் பல செயல்பவடுவதால் மக்களின் பயன்பாடு அதிகளவில் காணப்படும் அத்தியாவசிய சாலைகளாக இந்த சாலைகள் உள்ளன.

கேரள மாநிலம் மற்றும் தென்காசி, அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்தச் சாலையில்தான் வந்து செல்கின்றனா். அவசர ஊா்தி வாகனங்களும் சேதமான சாலையில் பயணிக்கும் சூழல் உள்ளதால், சரியான நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனையில் கொண்டு சோ்க்க முடியாமல் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

தினமும் புழுதி கலந்த காற்றை சுவாசித்து வாழ்ந்து வரும் இப்பகுதி மக்கள், வியாபாரிகள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

எனவே, திருநெல்வேலி நகரில் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com