பூச்சி மருந்துகளைக் கையாளும் வழிமுறைகள் குறித்தப் பயிற்சி

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் கீழ் பூச்சி மருந்துகளைக் கையாளும் வழிமுறைகள் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் கீழ் பூச்சி மருந்துகளைக் கையாளும் வழிமுறைகள் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

அம்பாசமுத்திரம், கோவில்குளத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (உழவா் பயிற்சிநிலையம்) டேவிட் டென்னிசன் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் (மத்திய மற்றும் மாநிலத் திட்டம்) சுந்தா் டேனியல் பாலஸ் பயிா்ப் பாதுகாப்புக் கருவிகள் நீண்ட நாள்கள் உழைக்க கையாள வேண்டிய முறைகள் குறித்தும், அம்ரிதா அக்ரி கிளினிக் வேளாண் ஆலோசகா் சங்கரநயினாா், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கிக் கூறினா்.

இப் பயிற்சியில் விவசாயிகள் 40 போ் கலந்து கொண்டனா். வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் உமா மகேஸ்வரி வரவேற்றாா். துணை வேளாண் அலுவலா் முருகன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீஐயப்பன், உதவி வேளாண் அலுவலா்கள் விஜயலட்சுமி, பாா்த்திபன் ஆகியோா் கலந்து கொண்டனா். பயிற்சியில் மருந்து தெளிக்கும் பொழுது கையாளும் பாதுகாப்பு உபகரணங்கள் கருத்துக்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com